நாங்கள் எல்லாம் யார்
நாங்கள் எல்லாம் யார்

நாங்கள் எல்லாம் யார்

Spread the love

நாங்கள் எல்லாம் யார்

நாங்கள் எல்லாம் யார் ,சமூகத்தில் வெள்ளை வேட்டி வெள்ளை சேட்டு நல்லவன் என்று பெயர் இப்படி பலதரப்பட்ட கருப்பாடுகள் அலைந்து திரிகின்றன.


நாங்கள் எல்லாம் யார்யாரை நல்லவன் என்றும் சமூக வழிகாட்டி என்றும் நினைத்துக் கொண்டு வாழ்கிறோமோ அவர்கள் எல்லாமே முடிவில் ஒரு முற்றுப்புள்ளி ஆகவே போய் நிற்பார்கள்..


இவ்வாறு தான் இந்தியாவில் பலதரப்பட்ட சாமிகள் வந்து காலம் காலம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..


ஒரு காலத்தில் எங்களுடைய தமிழ் இனத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல இலட்சியத்திற்கும் மேலான ஒரு தலைவன் எங்களுக்கு இருந்தான்..
அதற்கு மேலாக ஒருவனால் ஒரு இனத்தை நேசிக்க முடியாது..


என்று அந்த இனம் அத்தலைவனை இழந்ததோ அன்றிலிருந்து புதிது புதிதாக நமது சமூகத்திற்கான வழிகாட்டிகளாக ஒவ்வொருவராக முளைத்து பின்பு காணாமல் போகிறார்கள்..


அவ்வாறான ஒரு தலைவனாக என்னை நினைக்க வேண்டாம்..
நான் சாதாரணமான ஒரு வைத்திய நிபுணன்..
எனக்கும் கடந்த காலத்தில் பல கசப்பான வரலாறுகள் உண்டு..


இருந்தும் எல்லாவற்றையுமே மக்கள் முன் நானே சொல்லியிருக்கிறேன்..
நான் மகாத்மா காந்தியோ அல்லது அன்னை தெரேசாவோ அல்ல..
இருந்தும் எனது பழைய வரலாற்றை கிளற நினைத்தவர்கள் இன்று வரை ஒரு திடமான ஒன்றை கிளறவில்லை..


நிற்க,
எமது தமிழினம் ஒரு நல்ல ஒரு தலைவனை தேடிக் கொண்டிருக்கின்றது என்பதற்காக நான் ஒரு தலைவனாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை.. எமது
தமிழினத்திற்கு நல்லோர் தலைவனை உங்களுடன் சேர்ந்து நானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன்..


அதனால் தான் என்னவோ 38 வருடமாக நான் ஒரு தேர்தலில் வாக்கு போட செல்லவில்லை..


காலங்கள் கடந்து போனாலும் 2024 இல் நாம் மீண்டும் தமிழின வழிகாட்டிக்காக ஒரு தேடலில் ஒரு புள்ளியில் வந்து நிற்கிறோம்..
புலம்பெயர்வாள் சமூகம் ஒரு தலைவனை தேடி தேடியே அடித்துக் கொள்கிறது..


சீமான் என்கிறார்கள்..
சுகாஸ் எம் பி என்கிறார்கள்..
கஜேந்திரன் என்கிறார்கள்..
சிவாஜிலிங்கம் என்கிறார்கள்..
சுமந்திரன் என்கிறார்கள்..
ஸ்ரீதரன் என்கிறார்கள்..
சாணக்கியன் என்கிறார்கள்..
உமா சந்திரபிரகாஷ் என்கிறார்கள்..
அங்கதன் என்கிறார்கள்..
ரவீராஜ் அவர்களின் மனைவி என்கிறார்கள்..
விக்னேஸ்வரன் என்கிறார்கள்..
செல்வம் அடைக்கலநாதன் என்கிறார்கள்
..


எல்லாம் என்கிறார்களே தவிர எனப்படுபவர்களை காணவில்லை..
நானும் உங்களுடன் தேடிக் கொண்டிருக்கிறேன்..


என்னை ஒரு போது மகனாக மட்டுமே ஜோசியுங்கள்..
இன்னும் ஒரு தலைவன் வராவிடின் இன்னும் 50 வருடங்களில் தமிழ் இலங்கையில் தொலைந்து போகும்..


நாமும் இலங்கையில் இருந்து தொலைந்து போவோம்..
காலத்தின் கட்டாய தேவை இது..


இப்படிக்கு
உங்கள் அன்புள்ள
இராமநாதன் அர்ஜுனா


Spread the love

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *